திருமணம் ஆன 3 மாதத்தில் இளைஞர் கொலை.. சரண்டரான முன்னாள் காதலியின் கணவர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கொலை செய்யப்பட்ட முரளி)


Advertisement

திருமணம் ஆன 3 மாதத்தில் இளைஞர் கொலையான விவகாரத்தில் மாதவரம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்தார்.

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் முரளி(24). இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதலித்து கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள். முதலில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் பெற்றோர் சம்மதித்து இருவரும் பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தனர்.


Advertisement

நேற்று காலை தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார் முரளி. அப்போது காலை 9 மணியளவில் பழைய மகாபலிபுர சாலை, காரபாக்கம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு அருகே டீக்கடையில் டீக்குடிக்க சென்றார். டீ வாங்கி குடித்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடி விட்டார். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கண்ணகி நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில் இறங்கிய போலீசார், சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கொலை நடந்திருக்குமா என விசாரணையை துவங்கினர். அதேபோல் முரளி கவுசல்யாவை திருமணம் செய்வதற்கு முன் வேறு ஒரு பெண்ணை  காதலித்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டதாகவும் நாளடைவில் மீண்டும் பழைய காதலியுடன் முரளி தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் காதலன் தான் கொலை செய்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வந்தனர்.


Advertisement

இது தொடர்பாக முரளி மற்றும் கவுசல்யா பெற்றோரிடமும் விசாரணை நடத்திய போலீசார், முரளியின் முன்னாள் காதலியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த வந்த நிலையில் அவரது கணவர் தான் தான் இந்த கொலையை செய்ததாக கூறி மாதவரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement