“700 கோடி கேட்டேன்; எடியூரப்பா ஆயிரம் கோடி தருகிறேன் என்றார்” - தகுதிநீக்க எம்எல்ஏ பேட்டி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

700 கோடி ரூபாய் கேட்டேன், எடியூரப்பா 1000 கோடி தருகிறேன் என்றார் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நாராயண கவுடா கூறியுள்ளார்.


Advertisement

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் புதிய முதலமைச்சராக பாஜ‌கவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். இதனிடையே கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறியதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்களின் பதவியை அப்போதைய சபாநாயகர் பறித்தார். இதை ரத்து செய்யக்கோரி 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


Advertisement

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாராயண கவுடா, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு முன்பாக தங்கள் இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “யாரோ ஒருவர் என்னிடம் வந்து ‘எடியூரப்பா அழைக்கிறார்’ என்றார். அவர் சொன்னதால் அதிகாலை 5 மணிக்கு எடியூரப்பாவை அவரது வீட்டில் சந்திக்க சென்றேன். அவர் அப்போது பூஜையில் இருந்ததார். அதை முடித்து கொண்டு வந்தவரை பார்த்து மரியாதை அளிக்கும் பொருட்டு எழுந்து நின்றேன்.  அவர் என்னை உட்கார சொன்னார். 

எடுத்தவுடனேயே ‘மீண்டும் நான் முதல்வாரக உங்களின் ஆதரவு வேண்டும்’ என்றார். நான், ‘ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் கிருஷ்ணராஜபேட்டை தொகுதி மேம்பாட்டிற்காக நீங்கள் 700 கோடி தர வேண்டும்’ என்றேன். அதற்கு அவர், ‘மேலே 300 கோடி சேர்த்து 1000 கோடி தருகிறேன். என்னை ஆதரியுங்கள்’ என்றார். நான் உறுதி அளித்தபடி சென்னதை செய்தேன். ஆனால், தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளார். அது வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “எனக்கு மட்டுமில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும், தொகுதி மேம்பாட்டிற்காகப் பணம் வழங்கப்பட்டது. எல்லா எம்எல்ஏக்களும் மாண்டியாவில் சந்தித்து எடியூரப்பாவை ஆதரிப்பதாக உறுதியளித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சு தற்போது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement