காயத்தால் துடிதுடித்த நல்ல பாம்பு - 2 மணி நேர அறுவை சிகிச்சை! 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் காயத்துடன் போராடிய நல்ல பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 


Advertisement

மதுரை திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால் அது உயிருக்கு போராடியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மீட்ட ஊர்வன அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


Advertisement

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்தனர். உடனடியாக முதல் உதவியும் அளிக்கப்பட்டது. பாம்புக்கு அறுவைசிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்கும் என்ற நிலை இருந்ததால், உடனடியாக டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாம்புக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்த தடையும் இன்றி  ஊர்ந்து சென்ற பாம்பு, தன் இயல்பான குணத்தை வெளிப்படுத்தியது. இதனை அடுத்து புதுக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement