ஆர்எஸ்எஸ் தலைவருடன் ஒன்றரை மணி நேரம் நீடித்த தேவிந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் தேவிந்திர ஃபட்னாவிஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துள்ளார். 


Advertisement

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்றிரவு சுமார் ஒன்றரை மணி நேரம் இச்சந்திப்பு நடந்தது. மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைவது குறித்து எந்த நேரத்திலும் நல்ல செய்தி வரலாம் என இச்சந்திப்புக்கு முன்னதாக அம்மாநில அமைச்சர் சுதிர் முங்கன்டிவார் கூறியிருந்தார். 


Advertisement

இதற்கிடையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் தங்கள் கட்சியை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சுழற்சி முறையில் தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வி்ட்டுத்தந்தால் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு என சிவசேனா திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் இதற்கு பாஜக உடன்பட மறுக்கிறது. 

அதே நேரம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் முதல்வர் - ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனிடையே ஆளுநர் கோஷியாரியை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement