சசிகலாவின் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சசிகலாவுக்கு சொந்தமானதாக கருதப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

2017ஆம் ஆண்டு 'ஆப்ரேஷன் கிளீன் மணி' என்ற பெயரில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், 4ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 


Advertisement

அது தொடர்பாக சசிகலாவின் உறவினர்கள் மற்றும் பினாமிகள் உட்பட பலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், 2016ஆம்‌ ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின் சொத்துகள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. 

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து 9 சொத்துகளை, பினாமி பெயரில் சசிகலா வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சொத்துகள் வாங்கப்பட்டதாகவும், பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர். 


Advertisement

இந்தநிலையில், சென்னை, கோவை மற்றும் புதுச்சேரியில் சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் சொகுசு விடுதி, நகைக்கடை உள்ளிட்ட 9 சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சொத்துகளின் மதிப்பு ஆயிரத்து 600 கோடி எனக் கூறப்படுகிறது. பினாமி சட்டத்தின் அடிப்படையில் இந்த சொத்துகள் முடக்கப்பட்டதாக வருமான‌வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. 90 நாட்களுக்குள் சசிகலா நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement