[X] Close

பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மூன்று பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். 


Advertisement

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலை மக்கள் நீதி மய்யம் சந்தித்தது. மக்கள் நீதி மய்யம் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். கமல்ஹாசன் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொகுதிகளில் மட்டும் கணிசமான வாக்குகளை பெற்றனர். இருப்பினும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

                 


Advertisement

இந்நிலையில், மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன், ஸ்ரீகாருண்யா, ரவி ஆகிய மூன்று பேரும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். இதில் ராஜேந்திரன் - அரக்கோணம், ஸ்ரீகாருண்யா - கிருஷ்ணகிரி, ரவி - சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement