[X] Close >

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்

Rain-may-chances-soon-in-tamilnadu

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Advertisement

வட கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை இல்லை. ஆங்காங்கே மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. தற்போது அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 அல்லது 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.


Advertisement

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 6,7,8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல் டெல்லியில் இருந்து காற்று மாசு சென்னைக்கு வர வாய்ப்பில்லை. அப்படி காற்று மாசு இருந்தால், அது சென்னையில் உருவானதாகவே இருக்கும். அதனையும் ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக்காற்று கட்டுப்படுத்திவிடும் என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close