மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. 


Advertisement

கொருக்குப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான். 
மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டம் விட்டதில் சென்னையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

இந்நிலையில், சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த காட்சி வெளியாகியுள்ளது. அதில், சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பாலத்தின் மேல் தந்தை, தாய், சிறுவன் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சிக்கியதும் தந்தை உடனே வாகனத்தை நிறுத்துகிறார். பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் சிறுவனை காப்பாற்ற முற்படுகின்றனர். 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement