லாட்டரியில் சுமார் ரூ. 29 கோடி பரிசு பெற்ற இந்தியரை, அபுதாபி பிக் டிக்கட் லாட்டரி நிறுவனம் தேடி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி பிரபலம். இதில் டிக்கெட் வாங்கிய பல இந்தியர்கள் கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மங்களூரைச் சேர்ந்த முகமது பயஸ் என்பவருக்கு இதே லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த லாட்டரி குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார், 28,86,62,884 கோடி ரூபாய்!
இவர் கேரளாவைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், இவரைத் தொடர்பு கொள்ள லாட்டரி நிறுவனத்தினர் முயன்றனர். ஆனால், அவர் குறிப்பிட்டிருந்த நம்பர் வேறொருவருக்குச் செல்கிறது. அவர் கொடுத்த மற்றொரு எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், அவர் இப்போது இங்கு இல்லை என்று பதில் வருகிறதாம். அவரை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது அந்த லாட்டரி நிறுவனம்!
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?