‘தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகள் கட்டாயம்’ - யுஜிசி அறிவுறுத்தல்

UGC-Asks-Varsities-To-Install-Jammers-In-Exam-Centres

தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் என்ற அரசின் கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடக்கும் தேர்வின் போது முறைகேடுகளை தவிர்க்க ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016ஆம் ஆண்டு அரசு வெளியிட்டது. 


Advertisement

அதில் தேர்வு நடக்கும் வளாகத்தைச் சுற்றி 100 மீட்டருக்கு எந்த சிக்னலும் கிடைக்காத வகையில் அரசு பரிந்துரைத்துள்ள ஜாமர் கருவியை பொறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள கடிதத்தில், தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் என்ற அரசின் கொள்கையை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்றும் தேர்வு நேரத்தில் கருவிகள் சரியான முறையில் பணியாற்றுகிறதா என்று சோதனை செய்ய வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement