பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் ஷர்மா 9 (5) ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சிக்கர் தவான் நிலைத்து ஆடினார்.
இதற்கிடையே கே.எல்.ராகுல் 15 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 22 (13) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிக்கர் தவான் 41 (42) ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற ரிஷாப் பண்ட் 27 (26) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய குருனல் பாண்ட்யா 9 (7) ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 14 (5) ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
Loading More post
கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு
விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்பு!
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
“விவேக் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி