புதுவை முதல்வருக்கு கடலுக்குள் பிறந்தநாள் பேனர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி முதலமைச்சர் நராயணசாமி வரும் 30ல் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 
இதையொட்டி புதுவையின் முக்கியமான இடங்களில் அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் மூலம் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். புதுவையின் பிரதான பகுதிகளில் முதலமைச்சர் நராயணசாமியின் பேனர்களை சிலர் வைக்கத் தொடங்கிவிட்டனர். முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சிக் காலத்தில், புதுவையின் மூலைமுடுக்கெல்லாம் அவரது பேனர்கள் தென்படும். புதுவையில் இருந்த பேனர் கலாச்சாரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவியது. இதனால், தனது பிறந்தநாளுக்கு தொண்டர்கள் யாரும் கட்-அவுட் வைக்க வேண்டாம் என்று தற்போதைய முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டிருந்தார். கட்-அவுட்டுகள் வைக்க செலவு செய்யப்படும் தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொண்டர்கள் அளிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நாராயணசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கடலுக்கு நடுவில் வாழ்த்து செய்தியுடன் பேனர் வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் வைரலாகப் பரவி வருகிறது. 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement