திருவள்ளூவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப்பார்க்காதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்ட பதிவில், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்ற குறள் கூறப்பட்டிருந்தது. குறளுக்கான விளக்கம் ஒன்றினையும் பதிவிட்டிருந்தது.
அத்துடன், திருவள்ளுவர் காவி நிற உடையில் உள்ள படத்தையும் பதிவிட்டிருந்தனர். அந்த படத்தில் வள்ளுவர் திருநீர் பூசி, ருத்ராட்சம் அணிந்த நிலையில் இருந்தார். வழக்கமாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில், திருவள்ளுவர் வெண்மை நிற ஆடை அணிந்திருப்பார். ஆனால் இந்தப் பதிவில் காவி நிறத்தில் அவர் உடை அணிந்திருந்ததால் இதற்கு திமுக, கம்யூனிட்ஸ்டு ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, “திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல். அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?