2 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவ‌ர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக, 7வது நாளாக ராமே‌ஸ்வரம் சுற்றுப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் பிறகு நேற்று காலை 800-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் நேற்றிரவு 7 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். 


Advertisement

எட்டுக்கும் அதிகமான ரோந்துக் கப்பல்களில் வந்த அவர்கள், தமிழக மீனவர்களை அங்கு மீன்பிடிக்கக் கூடாதெனக் கூறி, அவர்களது வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், பிடித்து வைத்திருந்த இறால் மீன்கள் ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இன்று அதிகாலை வரை 200-க்கும் அதிகமான படகில் சென்ற மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

பல படகுகளும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களும் சேதப்படுத்‌தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலால் ஒரு படகுக்கு 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்‌டிருப்பதாக, கரை திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் கூறினர். தொடர்கதையாகியுள்ள ‌இந்தத் தாக்குதலுக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement