“தாராள வர்த்தக ஒப்பந்தத்தை வரவேற்கிறேன்” - தாய்லாந்தில் பிரதமர் மோடி பேச்சு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் என்ற முடிவை தாம் வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Advertisement

தாய்லாந்துக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுடனான 16வது மாநாட்டில் பங்கேற்றார். அதில் இந்தியாவுடன் புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகள் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டதை மோடி வரவேற்றார். 


Advertisement

இதன் மூலம் ஆசியான் நாடுகளுக்கிடையே பொருளாதாரம் வலுப்படும் என்று தெரிவித்த மோடி, ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் இறுதியில் ஆசியான் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் தலைவர்களுடன் கைகோர்த்தபடி மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement