JUST IN

Advertisement

‘சிவசேனாவுக்கு ஆதரவளியுங்கள்’- சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நிலவிவரும் நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவளிக்கக்கோரி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் எம்.பி. ஹுசேன் தல்வாய் கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

அண்மையில் முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணியமைத்து போட்டியிட்டன. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை கூட்டணி பெற்றிருந்தாலும், முதல்வர் யார் என்பதில் இரு கட்சிக்கும் இடையே இழுபறி என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் எந்த ஆட்சியும் அமையாவிட்டால் வரும் 7ம் தேதி முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக அம்மாநில நிதித்துறை அமைச்சர் சுதிர் முன்கந்திவார் பேட்டி ஒன்று அளித்திருந்தார். இதை தொடர்ந்து சுதிரின் பேச்சுக்கு சிவசேனா கட்சி கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை பாஜக மிரட்டிப்பார்ப்பதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டினார். 


Advertisement

பின்னர், தான் எதார்த்தமாக பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக சுதிர் முன்கந்திவார் கூறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சிவசேனா ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து யாருடனும் பேசவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே, சோனியா காந்திக்கு, காங்கிரஸ் எம்.பி ஹுசைன் தல்வாய் எழுதிய கடிதத்தில், பிரதீபா பாட்டில், பிரனாப் முகர்ஜி ஆகியோர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு சிவசேனா கட்சி ஆதரவளித்தது நினைவுகூறத்தக்கது எனவும், பாஜகவும், சிவசேனாவும் வேறுவேறு. சிவசேனாவின் அரசியல், பாஜகவை போல் இல்லாமல் அனைத்தையும் உள்ளடக்கியதாகிவிட்டது எனவும், பாஜகவை அதிகாரத்திற்கு வெளியே வைக்கவேண்டுமெனில் நாம் சிவசேனாவை ஆதரிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

இதுகுறித்து சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், “சோசலிச சித்தாந்தத்தை உடையவர் தல்வாய். அவர் ஒரு முற்போக்கான இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது நிலைப்பாட்டை வரவேற்கிறோம்; ஆனால், தேர்தலை நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தே சந்தித்தோம். எனவே, கூட்டணி தர்மத்தை இறுதிவரை நாங்கள் கடைப்பிடிப்போம்” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement