‘2 மாநகராட்சிகள், 20% இடங்கள்’ - அதிமுகவிடம் கேட்க தேமுதிக முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவிடம் 2 மாநகராட்சிகள், 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Advertisement

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. அதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்ந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இது கூட்டணி கட்சிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் பிரசாரம் அதிமுகவுக்கு பலமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில் வரும் உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவிடம் 2 மாநகராட்சிகள், 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் குறித்து தகவல் தெரிவித்துள்ள தேமுதிக மூத்த நிர்வாகிகள், “அதிமுக - தேமுதிக கூட்டணி இணக்கமான நிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் தேமுதிக இணைந்து பணியாற்றியதால் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதே போல் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் பிரசாரம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

அதனால் வரும் தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவே தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவிடம் 2 மாநகராட்சிகள், 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டணி கட்சிகள் அனைத்தையும் அதிமுக அழைத்து குழப்பமின்றி இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளனர். 

அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் 2 மேயர் இடங்களை அதிமுகவிடம் பாஜக கேட்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து கட்சி தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் உள்ளன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement