சாத் பூஜையில் பரிதாபம்: கோயில் சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பீகாரில் சாத் பூஜையின்போது கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.


Advertisement

வடமாநிலங்களில் சாத் பூஜை விழா நடைபெற்று வருகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கொண்டாடப்படும் இந்த பூஜைக்காக, நீர்நிலைகளில் திரளும் மக்கள், சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம். 


Advertisement

பீகாரில் உள்ள சமஸ்திபூரில் உள்ள கோயில் ஒன்றிலும் ஏராளமான பக்தர்கள் இன்று காலை கூடியிருந்தனர். ஆற்றின் கரையோரம் இருந்த கோயில் அருகே பக்தர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தபோது, சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அங்கு வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement