நல்ல பாம்புக்கு முத்தம்: வாலிபருக்கு ஜெயில்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நல்ல பாம்புக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு 5 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை அருகே உள்ள பன்வலைச் சேர்ந்தவர் அஜய் பவார். இவருக்கு பாம்பு பிடிப்பது கைவந்த கலை. பல இடங்களில் பாம்புகளைப் பிடித்து வேடிக்கை காண்பிப்பார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்து வித்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார். அப்போது படம் எடுத்து நின்ற பாம்பின் பின் தலையில் முத்தம் கொடுத்தார். எதிர்பாராத விதமாக நல்ல பாம்பு, பவாரின் உதட்டைப் பதம் பார்த்தது. பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார் பவார்.
இந்நிலையில் இவர் மீது பாம்புகளை துன்புறுத்துவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவருக்கு 5 நாள் சிறைதண்டனை கொடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement