‘பிகில்’ நடிகைக்கு அன்பு பரிசு கொடுத்த நயன்தாரா 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை நயன்தாரா தனக்கு அன்பு பரிசு அளித்துள்ளதாக இளம் நடிகை அம்ரிதா ஐயர் தெரிவித்துள்ளார்.


Advertisement

அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் ‘பிகில்’. ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக அட்லீ - விஜய் கூட்டணியில் ‘பிகில்’ படம் உருவாகியிருக்கிறது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம் பல நாடுகளில் ரிலீஸானது.


Advertisement

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார். அவருடன் இணைந்து பல இளம் பெண் நடிகைகள் நடித்திருந்தனர். அவர்களில் ஒருவர் அம்ரிதா ஐயர் . இவர்தான் பெண்கள் அணிக்கு கேப்டனாக நடித்திருந்தார். இவர் நடித்திருந்த தென்றல் கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது. 

அதை மனதில் கொண்டு நடிகை நயன்தாரா தனக்கு கைகடிகாரம் ஒன்றை பரிசாக அளித்ததாக தனது சமூக ஊடகப் பதிவில் அம்ரிதா ஐயர் தெரிவித்துள்ளார். இந்தப் பரிசை நயன் இவரது பிறந்தநாளுக்கு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நயன் உடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

கடந்த 2018 ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவான ‘படை வீரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்ரிதா ஐயர் . இவர் தற்போது கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement