ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் வண்ண உடை அணிந்து விளையாடுவது வழக்கம் என்றாலும், அவர்கள் முகக்கவசம் அணிந்து களமிறங்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
தீபாவளிக்குப் பிறகு, டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். டெல்லியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் தான், இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியை நடத்துவதற்கு சாதகமான சூழல்நிலை உள்ளதா ? என்றால் இல்லை என்று கூறவேண்டும்.
மங்கலாகத் தெரியும் வானம், மாசு நிறைந்த மைதானம் என அனைத்தும் வீரர்களுக்கு சவாலாக உள்ளன. மின்னொளியில் போட்டி நடைபெற்றாலும் பந்து சரியாக கண்ணுக்குத் தெரியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, வங்கதேச வீரர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட காணொலி வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய அணி வீரர்கள் முகக்கவசம் அணியாமல் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா, கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலியிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் போட்டி காற்று மாசு காரணமாக ரத்து செய்யப்படுமா ? என்று கங்குலியிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்ய இயலாது எனவும், திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?