பதில் சொன்னாலே போதும், பரிசு நிச்சயம்!

Google-Opinion-Rewards-Android-App-Now-Available-in-India

கூகுள் அனுப்பும் எளிய சர்வேயில் உங்கள் கருத்தை பதிவு செய்தாலே போதும். பரிசு நிச்சயம் உண்டு.


Advertisement

குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே கிடைக்கப்பெற்ற கூகுளின், கூகுள் ஒப்பீனியன் ரிவார்ட்ஸ் ஆப் (Google Opionion Rewards app) தற்போது இந்தியா, சிங்கப்பூர், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் கிடைக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது கூகுள் நிறுவனம். விருப்பமுள்ளவர்கள் தங்களது மொபைல் போனில் இந்த ஆப்-ஐ டவுண்லோடு செய்து கொள்ளலாம். கூகுள் அனுப்பும் எளிய சர்வேவுக்கு பதிலளித்தால் போதும். உங்களுக்கு பரிசு நிச்சயம் உண்டு.

இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்தவுடன், அது கேட்கும் சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இவை முடிந்தவுடன், உங்கள் கூகுள் கணக்கு பதிவு செய்யப்பட்டுவிடும். பின், கூகுள் அனுப்பும் எளிய சர்வேயில் உங்கள் கருத்தைப் பதிவு செய்தால் போதுமானது. கூகுள் ப்ளே அக்கவுன்ட்டில் சிறிய தொகை பரிசாக கிரெடிட் செய்யப்படும். குறைந்தபட்சம் 10 ரூபாயில் ஆரம்பித்து, சர்வேயைப் பொறுத்து இதன் மதிப்பு அதிகரிக்கும். கூகுள் ப்ளே ஸ்டோரில் பெய்டு அப்ளிகேஷன்களை வாங்கவோ அல்லது கூகுள் புக்ஸ் வசதியில் மின்புத்தகம் டவுண்லோடு செய்யவோ கூட இந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Advertisement

வாரந்தோறும் கூகுள் நிறுவனம் உங்களுக்கு இந்த சர்வேயை அனுப்புகிறது. கூகுள் அனுப்பியவுடன் அந்த ஆப்-ஐ வைத்திருப்பவர்கள் அதற்கான நோட்டிபிகேஷனை பெறுவர். கூகுள் அனுப்பிய சர்வேக்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும். 24 மணி நேரத்திற்கு பின் உங்களால் பதிலளிக்க இயலாது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement