ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவித்தது மத்திய அரசு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ICON OF GOLDEN JUBILEE என்ற விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது


Advertisement

ICON OF GOLDEN JUBILEE என்ற விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படவுள்ளது. கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் தெரிவித்தார். 


Advertisement

விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement