கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டு உபயோக பொருள்கள் பெருமளவில் செயலிழந்தன.
விருத்தாசலம் அருகேயுள்ள மணவாளநல்லூர், ராஜீவ் காந்தி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில், நேற்று மின்னழுத்தம் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாகவும், குறிப்பிட்ட நேரத்தில் உயர் மின்னழுத்தம் வந்ததன் காரணமாக குடியிருப்பு பகுதியில் உள்ள ஏராளமான மின் உபயோக பொருள்கள் செயலிழந்ததாகவும் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செயலிழந்த தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை வீதிகளில் கிடத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்மாற்றியை முறையாக பராமரிக்காததால் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டதாகவும், இது குறித்து பலமுறை மின்வாரியத்திடன் புகார் கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் மின்சாரம் வாரியம் சார்பாக சேதமடைந்த மின் உபயோக பொருள்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Loading More post
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!