டெஸ்ட் போட்டிகளில் ரோகித் ஷர்மாவை சேவாக்குடன் ஒப்பிட்டு கருத்துகள் எழுந்து வரும் நிலையில், சேவாக்.. சேவாக் தான் என ரோகித் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக இருக்கும் ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கிவிட்டார். அண்மையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், 2 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் விளாசி அவர் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் ரோகிஷ் ஷர்மாவின் டெஸ்ட் தொடக்க ஆட்டம் சேவாக் போன்று இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த தொடரைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ரோகித் ஷர்மா கேப்டனாக களமிறங்குகிறார்.
இந்நிலையில் பேட்டியளித்துள்ள ரோகித் ஷர்மா, “நானும் சேவாக்கும் ஒரே மாதிரியாக விளையாடியதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சேவாக்.. சேவாக் தான். அவர் கிரிக்கெட்டில் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் எனக்கு அப்படி இல்லை. அணி என்ன நினைக்கிறதோ அதை நான் செய்தால், அதன்மூலம் நான் அதிகமாக மகிழ்ச்சியடைகிறேன். சேவாக் அவர் விருப்பதிற்கு ஏற்றது போல விளையாடினார். அவரை அணி வேண்டுமென்று நினைத்தது. அதே நிலை தான் எனக்கும். ஆனால் இங்கு அணி நினைக்கும்படி நான் விளையாடுகிறேன். சேவாக் விளையாடிய பாணியில் நான் விளையாடுகிறேன், அதையே அணியும் வேண்டும் என்கிறது. ஒருவேளை அதை என்னால் செய்ய முடிந்தால், நிறைய பிரச்னைகளை தீர்க்க முடியும்” என்றார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்