நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.
தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அறையில், விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி எம்.எல்.ஏவாக ரெட்டியார்பட்டி நாராயணனும் பதவியேற்றனர். இடைத்தேர்தல் வெற்றி முடிவுகள் 24ஆம் தேதி வெளியானநிலையில், இருவரும் கடந்த 29ஆம் தேதி பதவியேற்பதாக இருந்தது.
இந்தநிலையில், நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித் மீட்புப்பணியில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டிருந்ததால், பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பதவியேற்புக்கு முன்னதாக முத்தமிழ்ச்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அஞ்சலி செலுத்தினர்.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'