சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று காலை தொடங்கியது. நடிகர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.
சிபிராஜ், நந்திதா, பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் உட்பட பலர் நடிக்கும் படம், ’கபடதாரி’. சிபிராஜ் நடித்த ’சத்யா’, விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சைமன் கிங் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சிவகுமார் படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் சசி, நடிகர் சிபிராஜ், தயாரிப்பாளர்கள் தியா மூவிஸ் பி.பிரதீப், தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், ‘வால்டர்’ இயக்குநர் அன்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் கலந்து கொண்டனர். படத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?