‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..!

Jayalalitha-Biopic-movie-release-need-to-be-stayed-petitions-J-Deepa-in-MHC

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் "தலைவி" படத்தை தனது அனுமதியில்லாமல் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குநர் ஏ.எல்விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கெளதவ் வாசுதேவ் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரித்து வருகிறார். அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.


Advertisement

இந்நிலையில் இந்தப் படங்கள் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தன் அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க வேண்டும். அத்துடன் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement