தனது கருத்தால் நடிகை அனுஷ்கா சர்மா மனம் புண்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது, இந்திய அணி கேப்டன் விராத் கோலி மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு அணி தேர்வாளர்களில் ஒருவர், தேநீர் கொடுத்து உபசரித்தார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வுக் குழுவினரை சாடிய அவர், யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, நடிகை அனுஷ்கா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தனக்குத் தேர்வாளர்கள் யாரும் தேநீர் வழங்கவில்லை என்றும் உலகக் கோப்பைத் தொடரில், போட்டியை தேர்வாளர்களுக்கான அறையில் இருந்து பார்க்கவில்லை என்றும் உங்கள் சர்ச்சைக்குள் தேவையில்லாமல் எனது பெயரை இழுக்க வேண்டாம் என்றும் அதை அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே தனது கருத்துக்கு பரூக் என்ஜினீயர், மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘இந்தச் சம்பவத்தில் அனுஷ்கா சர்மாவை நான் ஏதும் சொல்லவில்லை. அவர் சிறந்த பெண்மணி. நான் நகைச்சுவைக்காக சொன்ன விஷயம் பெரிதாக ஊதப்படுகிறது. தேர்வாளர்கள் மீதுதான், என் கோபமே தவிர, அனுஷ்கா மீது இல்லை. நான் கூறிய கருத்தால் அனுஷ்கா மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?