மன ஆரோக்கிய பிரச்னை: கிரிக்கெட்டிலிருந்து மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மன ஆரோக்கிய பிரச்னை காரணமாக ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வேல் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Advertisement

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வேல். இவர் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை. அத்துடன் தற்போது இவர் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது திடீரென அவர் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். 


Advertisement

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி மேக்ஸ்வேல் சில மன ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சில நாட்கள் விலகி ஓய்வு எடுக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் மேக்ஸ்வேலுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் மேக்ஸ்வேலுக்கு பதிலாக டாசி ஷார்ட் மாற்று வீரராக பங்கேற்கவுள்ளார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement