[X] Close >

வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கும் வரி விதிப்பா ?

Unaccounted-Gold-Above-a-Threshold-May-Attract-Heavy-Tax-Soon-as-Govt-Plans----Amnesty----Scheme

கருப்பு பணத்தை மீட்கும் மற்றொரு முயற்சியாக கணக்கில் காட்டப்படாத தங்கத்திற்கு வரிவிதிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Image result for tax for gold

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தங்கள் பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் கோடி பணம் மீண்டும் தங்கமாக பதுங்கிவிட்டதாக தெரிகிறது. இந்தியர்களிடம் சுமார் 20 ஆயிரம் டன் அளவிற்கு தங்கம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கணக்கில் காட்டாமல் இறக்குமதி செய்தது மற்றும் பரம்பரையாக வைத்திருந்த தங்கம் என மொத்தம் 24 ஆயிரம் டன் அளவிற்கு தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 


Advertisement

Image result for tax for gold

இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு சுமா‌ர் 106 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை கணக்கில் கொண்டுவர மத்திய அரசு, விரைவில் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது. அதன்படி, தனிநபர் ஒருவர் ரசீது இல்லாமலும், கணக்கில் காட்டப்படாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும் என்றும், இதற்கு 30 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close