எதிர்க் கட்சித் தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதியுங்கள் - ஐரோப்பிய எம்பி

எதிர்க் கட்சித் தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதியுங்கள் - ஐரோப்பிய எம்பி
எதிர்க் கட்சித் தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதியுங்கள் - ஐரோப்பிய எம்பி

எதிர்க் கட்சியைச் சேர்ந்த தலைவர்களையும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பி நிகோலஸ் ஃபெஸ்ட்(Nicolaus Fest) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் சிலர் இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று முன் தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதற்கு பிறகு அவர்கள் அனைவரும் நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இன்றும் அவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பி நிகோலஸ் ஃபெஸ்ட், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களை அனுமதித்ததால், இந்தியாவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர்களையும் காஷ்மீர் மாநிலத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும். தற்போது இந்த விஷயத்தில் அரசு எதிர்க் கட்சிகளை காஷ்மீருக்குள் அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் காஷ்மீர் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com