இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளேவின் பதவிக் காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடியும் நிலையில், பயிற்சியாளர் பதவி குறித்து பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயிற்சியாளர் பதவியில் தொடர கும்ப்ளே விருப்பம் தெரிவித்திருந்தாலும், பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கூறியுள்ளதால், பிசிசிஐ தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலை சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழு நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடர் முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பதவி வகித்து வருகிறார். சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் உள்ளிட்ட பல்வேறு பாசிடிவ் விஷயங்களே கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். வேகப்பந்து வீச்சுக்கென தனியான பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிசிசிஐ நிர்வாகக் குழுவிடம் கும்ப்ளே சமீபத்தில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement