80 மணி நேரத்தை தாண்டிய மீட்புப் பணி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகள் 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.


Advertisement

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில், 2 வயது சுஜித் வில்சன் என்ற குழந்தை தவறி விழுந்தான். கடந்த 25ஆம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனியார் மீட்புக் குழுவினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் குழந்தையை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 


Advertisement

86 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் குழந்தையை, ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு துளையிட்டு, பின்னர் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அதன் வழியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இரண்டு ரிக் இயந்திரங்கள் நடுக்காட்டுப்பட்டிக்கு வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. துளையிடும் பணியின்போது குறிப்பிட்ட ஆழத்தில் கடினமான பாறை தென்பட்டதால் பணியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் போர் இயந்திரங்கள் மூலம் கடினமான பாறைகளில் துளையிடப்பட்டு தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழந்தையை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

        

இந்நிலையில், குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகள் 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழியை பெரிதுபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரிக் இயந்திரம் மூலம் 60 அடியை கடந்து குழி பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. 98 அடிக்குப் பிறகு பக்கவாட்டில் தோண்டப்படும். பக்கவாட்டில் குழி தோண்ட தயார் நிலையில் என்எல்சி உள்ளது. 


Advertisement

இதனிடையே, மீட்புப் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மேற்பார்வையிட்டார். அப்போது, மீட்புப் பணிகள் குறித்து வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement