ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிக்காக பஞ்சாப்பில் இருந்து இரண்டு விவசாயிகள் திருச்சிக்கு கொண்டு வரப்பட உள்ளனர்.
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 75 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது 60 அடிக்கு மேல் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. சுஜித்தை உயிருடன் மீட்க தமிழ்நாடு அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்தவகையில் பஞ்சாபில் இருந்து அனுபவம் வாய்ந்த விவசாயிகள் 2 பேரை விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வர அரசு முடிவு செய்துள்ளது. அதாவது விவசாயிகள் குரிந்தர் சிங் மற்றும் ஹர்விந்தர சிங் ஆகிய இருவரும் தமிழ்நாடு வர உள்ளனர்.
இந்த இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கெனவே இதுபோன்று மூன்று குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய போது மீட்ட அனுபவம் உடையவர்கள். இவர்கள் இருவரும் இன்று இரவு 11.30 மணிக்கு விமானம் மூலமாக திருச்சி அழைத்து வரப் பட உள்ளனர். இவர்களின் மொத்த செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரியின் ஏற்பாட்டில் தமிழ்நாடு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்