பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டிக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் மோதிய இந்திய இணைத் தோல்வியைத் தழுவியது.


Advertisement

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள், ஜப்பானின் ஹிரோயுகி என்டோ மற்றும் யுடா வாடானபே இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.


Advertisement

இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் ஜிடியான் மற்றும் கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவுடன் நேற்று மோதினர். இந்தப் போட்டியில் கடுமையாகப் போராடியும் தோல்வியைத் தழுவியது இந்திய இணை. இதையடுத்து இந்தோனேஷிய இணை, தங்கத்தையும் இந்திய இணை வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement