நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி - ஹர்பஜன் சிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

'நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது' என ஹர்பஜன் சிங் கருத்து பதிவிட்டுள்ளார்


Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 40 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  


Advertisement

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுர்ஜித் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ''நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.


Advertisement

அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி'' என பதிவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement