திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை பத்திரமாக மீட்க, நாகையில் SOS குழந்தைகள் கிராமத்தில் பாஸ்கர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி மனம் உருக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடிஆழத்திற்குச் சென்றுவிட்டான். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும்.
இதனிடையே 27 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 100 அடி ஆழத்தில் உள்ள குழந்தை சுர்ஜித்தின் கை மேலே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு தற்போது வெளியாகி உள்ளது. இதன்மூலம் குழந்தையை எப்படியாவது மீட்டுவிட முடியும் என்ற புது நம்பிக்கையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டி, நாகையில் SOS குழந்தைகள் கிராமத்தில் பாஸ்கர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி மனம் உருக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!