சுமார் 100 அடி ஆழத்தில் உள்ள குழந்தை சுர்ஜித்தின் கை, மேலே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு தற்போது வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.
பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100
அடிஆழத்திற்குச் சென்றுவிட்டான். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 26 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 100 அடி ஆழத்தில் உள்ள குழந்தை சுர்ஜித்தின் கை மேலே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு தற்போது வெளியாகி உள்ளது. இதன்மூலம் குழந்தையை எப்படியாவது மீட்டுவிட முடியும் என்ற புது நம்பிக்கையும் பிறந்துள்ளது.
Loading More post
மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் திறப்பு!
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அடுத்தடுத்து பின்னடைவுகள்... நீர்த்துப் போகிறதா விவசாயிகள் போராட்டம்?!
ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்துவைத்தார் முதல்வர்