குழி தோண்டி குழந்தையை மீட்க 4 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.
பின்னர் 70 அடி ஆழத்துக்கு சென்ற குழந்தை தற்போது 85 அடி ஆழத்தில் உள்ளது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். 24 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித்தோண்ட முடிவு செய்துள்ளது.
ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்பட உள்ளது. குழி தோண்டப்பட்ட பிறகு பக்கவாட்டில் குழி தோண்டி ராணுவ வீரர்களை இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 90 அடி ஆழத்தை நோண்ட சுமாராக 4 மணி நேரமாகும் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!