JUST IN

Advertisement

குழந்தையை மீட்டுத்தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. - எம்.பி. ஜோதிமணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்


Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது.


Advertisement

பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற  எம்.பி. ஜோதிமணி  சுர்ஜித்தின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், கனத்த இதயத்துடன் நின்று கொண்டு இருக்கிறோம். குழந்தையை மட்டும் மீட்டுக்கொடுத்துவிடுங்கள் என பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர். எப்படியும் குழந்தையை மீட்டு தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடந்து செல்வதால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விடுகிறது. தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பிரத்யேக கருவியை வடிவமைக்க மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement