ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடுங்கள் - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கைவிடப்பட்ட பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் 15 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரமே திறந்த நிலையில் இருந்த பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், தேனி மாவட்டத்தில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டனவா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement