[X] Close >

இன்றைய முக்கியச் செய்திகள்!  

Today-s-headline-news


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 13 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. 


Advertisement

ஆழ்துளை குழியில் சிக்கிய குழந்தையின் தாய் மயக்க அடைந்துள்ளார். குழந்தையின் நிலை அறிந்து மயக்கமடைந்த தாய்க்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது


Advertisement

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழு திருச்சி விரைகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காலை 7:30 அல்லது 8 மணிக்குள் நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மீண்டும் ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் பதவியேற்க உள்ளார். 


Advertisement

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்தரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ராதா கிருஷ்ணா மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்ஃபிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close