மருத்துவ மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை வழங்க உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Advertisement

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்கள், தங்களது கைரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க வேண்டும். இந்த விவரங்களை வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் தர வேண்டும். மேலும் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் அரசு மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் நவம்பர் மாதம் 4ஆம் தேதிக்குள் தரவேண்டும். 


Advertisement

மேலும், நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும் விசாரணை செய்யவேண்டும் என்பதால், வருமான வரித்துறை இயக்குநரை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கில் சேர்த்துள்ளது. அத்துடன் வருமான வரித்துறை இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement