பிகில் படம் பார்க்க வருபவர்களுக்கு விதைப்பந்து : விஜய் ரசிகர்கள் அசத்தல் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பட்டுக்கோட்டையில் பிகில் திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு 2000 விதைப்பந்துகளை இலவசமாக விஜய் ரசிகர்கள் வழங்கினர்.


Advertisement

கடந்த சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கிய பிகில் திரைப்படம் ஒரு வழியாக இன்று வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 


Advertisement

பிகில் படம் வெளியாகுவதற்கு முன்னதாகவே விஜய் ரசிகர்கள் பேனருக்கு பதிலாக பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வந்தனர். அதேபோன்று இன்று பிகில் படம் வெளியானதை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் இலவசமாக விதைப்பந்து வழங்கி அசத்தினர். 

பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் 2000 விதைப்பந்துகள் இலவசமாக வழங்கினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement