விஜய் ஹசாரே இறுதிப்போட்டி: மிதுன் ஹாட்ரிக், 252 ரன்னில் ஆல் அவுட் ஆன தமிழகம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிப் போட்டியில், தமிழக அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது.


Advertisement

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு, ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. இதில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியும், மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

இறுதிப் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற கர்நாடக அணி கேப்டன் மணிஷ் பாண்டே பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தமிழக அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்தும், முரளி விஜய்யும் களமிறங்கினர். 2 பந்துகளை மட்டுமே சந்தித்த முரளி விஜய், டக் அவுட் ஆகி சொதப்பினார். அடுத்து வந்த அஸ்வின் 8 ரன்களில் வெளியேற, அபராஜித் வந்தார். அவரும் முகுந்தும் நிதானமாகவும் அதே நேரம் சரியான பந்துகளை விளாசியும் ஆடினர். அணியின் ஸ்கோர் 148 ரன்களாக இருந்த போது சிறப்பாக ஆடி வந்த முகுந்த் ஆட்டமிழந்தார். அவர் 85 ரன்கள் எடுத்திருந்தார். 


Advertisement

அடுத்து ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் வந்தார். நன்றாக ஆடி வந்த அபராஜித், 66 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்த தொடரில் சிறப்பாக ஆடி வந்த ஷாரூக் கான் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைக்கவில்லை.

கர்நாடக பந்துவீச்சாளர் அபிமன்யூ மிதுன், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அவர், ஷாருக் கான், முகமது, முருகன் அஸ்வின் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினார். இதனால், தமிழக அணி, 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.


Advertisement

கர்நாடக தரப்பில் மிதுன், 5 விக்கெட்டுகளையும் கவுசிக் 2 விக்கெட்டுகளையும் ஜெய்ன், குமாரப்பா கவுதம் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  அடுத்து கர்நாடக அணி பேட்டிங் செய்ய உள்ளது. நடப்புத் தொடரில் தமிழக அணி, தோல்வியையே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement