சிக்கிம் மாநிலத்தின் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற பொதுத்தேர்தலுடன், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த திங்கட் கிழமை நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக இரண்டு இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான சிகிம் கிரந்திகாரி மோர்ச்சா ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
போக்லாக்-கம்ராங் தொகுதியில் போட்டியிட்ட சிக்கிம் முதலமைச்சரும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளருமான பிரேம்சிங் தமாங் வெற்றி பெற்றார். மார்டம்-ரும்டெக் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோனம் ஷ் வென்சுங்பாவும், கேங்டாக் தொகுதியில் மற்றொரு பாஜக வேட்பாளர் யங் ஷேரிங் லெப்ச்சாவும் வெற்றி பெற்றனர். சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்முறையாக வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!