பின்னடைவு எதிரொலி - ஹரியானா பாஜக தலைவர் ராஜினாமா

Haryana-Election-Result-2019---Haryana-BJP-chief-Subhash-Barala-resigns

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்ததை காட்டிலும் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Advertisement

மகாராஷ்டிராவில் எதிர்பார்த்தபடி பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஹரியானாவில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக 36 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஜனநாயக ஜனதா கட்சி 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனால், எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜகவுக்கு தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Advertisement

பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெருபான்மையுடன் வெற்றி கிடைக்காததுடன், டொஹனா தொகுதியில் போட்டியிட்ட ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பரலா 22 ஆயிரம் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவேந்திர சிங் பாப்லி முன்னிலையில் இருக்கிறார். பின்னடைவு காரணமாக, சுபாஷ் பரலா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement