[X] Close >

'பிகில்' படத்துக்குத் தடையில்லை - திட்டமிட்டபடி நாளை வெளியாகும்!

Bigil-will-be-release-as-per-schedule

விஜய், நடித்துள்ள ‘பிகில்’ படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.


Advertisement

விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம், ’பிகில்’. நாளை ரிலீஸ் ஆகவுள்ள இந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி செல்வா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்தக் கதைக்கு உரிமை கோரி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் தனது ’பிரேசில்’ கதையையும் ’பிகில்’ கதையையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தன் கதையை பயன்படுத்தியதற்காக, ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என அவரது சார்பில் முறையிடப்பட்டுள்ளது.


Advertisement

                         

இந்த வழக்கு இன்று காலை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரது கோரிக்கைகளை வலியுறுத்தினார். அப்போது, மனுதாரர் தன் ஆவணங்களை, கையெழுத்து பிரதியாக இல்லாமல் டைப் செய்யப்பட்ட பிரதியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக ’பிகில்’ படத்துக்கு எதிராக உதவி இயக்குநர் செல்வா தொடர்ந்த வழக்கிலும், உரிமையியல் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இரண்டு வழக்கிலும் ’பிகில்’ படத்தின் வெளியீட்டுக்கு எவ்வித சிக்கலும் இல்லை. அதனால், பிகில் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close