ஹரியானாவில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் காங்கிரஸ் - வெல்லப்போவது யார்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.


Advertisement

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி 175 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதனால், பாஜக கூட்டணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும்ப் போட்டி நிலவுகிறது. 9.30 மணி நிலவரப்படி பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு இடங்களை பிடிக்கவில்லை.


Advertisement

2014 சட்டசபை தேர்தலில் பாஜக 47 இடங்களில் வென்றிருந்தது. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி வெறும் 15 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. 

                          

இந்நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. ஹரியானாவில் ராகுல் அதிக அளவிலான கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை பெறும் என்று முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.


Advertisement

ஹரியானாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், ஒரே ஒரு செய்தி நிறுவனம் மட்டுமே பாஜக - காங்கிரஸ் இடையே போட்டி நிலவும் என தெரிவித்திருந்தது. தற்போது அந்தக் கருத்து கணிப்புதான் உண்மையாகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement